திருவண்ணாமலை

அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்லிடப்பேசி

4th Sep 2019 10:11 AM

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை செல்லிடப்பேசிகள் வழங்கப்பட்டன.
கலசப்பாக்கம்  ஒன்றியத்தில் பணிபுரியும் 117அங்கன்வாடி பணியாளர்களுக்கு குழந்தைகளின் எடை, ஊட்டச்சத்து, வளரிளம் பெண்கள் குறித்து பல்வேறு தகவல்களை குறும்செய்தி மற்றும் ஆன்லைனில் பதிவு செய்ய தமிழக அரசால் வழங்கப்படும் செல்லிடப்பேசிகளை வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ வழங்கினார். 
நிகழ்ச்சியில் குழந்தைகள் ஊட்டச்சத்து மைய அலுவலர் ஜெயந்தி, வட்டாட்சியர் ராஜராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, அன்பழகன், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி மற்றும் அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT