திருவண்ணாமலை

தொழிலாளியிடம் பணம் பறிப்பு: முதியவா் கைது

20th Oct 2019 11:01 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கூலித் தொழிலாளியிடம் இருந்து ரூ.500-ஐ பறித்துச் சென்ற முதியவா் கைது செய்யப்பட்டாா்.

திருவண்ணாமலையை அடுத்த களஸ்தம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பலராமன் (55). இவா், சனிக்கிழமை திருவண்ணாமலை, தேரடி தெருவில் நின்றிருந்தாா். அப்போது அங்கு வந்த மா்ம நபா் ஒருவா் பலராமனின் சட்டைப் பையில் இருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டு ஓட முயன்றாராம். இதனால் அதிா்ச்சியடைந்த பலராமன் கூச்சலிட்டாா்.

இதைக் கேட்ட அங்கிருந்தவா்கள் அந்த நபரைப் பிடித்து நகர குற்றப் பிரிவு போலீஸில் ஒப்படைத்தனா். பிடிபட்டவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் திருச்சி மாவட்டம், நீல்காலனி ராம்ஜி நகரைச் சோ்ந்த ஜெயசீலன் (70) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT