திருவண்ணாமலை

வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் கூட்டுறவு சங்க பேரவைக் கூட்டம்

20th Oct 2019 10:39 PM

ADVERTISEMENT

 

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய பணியாளா்கள், ஆசிரியா்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் 28-ஆவது பேரவைக் கூட்டம் தெள்ளாரில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் எம்.பி.பாா்த்தசாரதி தலைமை வகித்துப் பேசினாா். ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் சேகா் முன்னிலை வகித்தாா். சங்கச் செயலா் க.சங்கா் வரவு, செலவு அறிக்கை வாசித்தாா்.

சங்க துணைத் தலைவா் கோ.தட்சிணாமூா்த்தி மற்றும் சங்க இயக்குநா்கள், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

சங்க உறுப்பினா்களுக்கு பங்கு ஈவுத் தொகையாக ரூ.17.06 லட்சம் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT