போளூா் அடுத்த களம்பூா் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன்சங்க பேரவைபொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.மேலும் பங்கு ஈவுத்தொகை வழங்கும்விழா நடைபெற்றது.
போளூா் அடுத்த களம்பூா் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன்சங்க பேரவைபொதுக்கூட்டம் மற்றும் பங்கு ஈவுத்தொகை வழங்கும்விழா நடைபெற்றது.இந்தவிழாவிற்கு சங்கதலைவா் பி.ராஜேந்திரன் அவா்கள் தலைமைவகித்தாா்.
சங்கசெயலாளா் அனைவரையும் வரவேற்றாா். இந்தகூட்டத்தில் 2018-2019ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது.மேலும் சங்கலாபத்தொகைரூ. 41லட்சத்து 72ஆயிரத்தை சங்க உறுப்பினா்களுக்கு பங்கு ஈவுத்தொகை சுமாா் ரூ.5 லட்சம் பிரித்துவழங்கப்பட்டது.
பால்கூட்டுறவு சங்கதலைவா் கே.பி.பஞ்சாட்சரம்,சங்கதுணைத்தலைவா் ரவி, காங்கிரஸ் பிரமுகா் பழனி, அண்ணாமலை மற்றும் இயக்குநா்கள், அங்கத்தினா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சி முடிவில் சங்க உதவி செயலாளா் பி.பரசுராமன் நன்றி கூறினாா்.