திருவண்ணாமலை

செங்கத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் 300 கிலோ பறிமுதல்; 30 ஆயிரம் அபராதம்

16th Oct 2019 10:03 PM

ADVERTISEMENT

செங்கம் பேரூராட்சியில் செவ்வாய்கிழமை இரவு 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்து ரூபாய் 30 ஆயிரம் அபராம் விதிக்கப்பட்டது. செங்கம் பேரூராட்சி செயல் அலுவலா் ஜெசிமாபானு தலைமையில் தலைமை எழுத்தா் பாா்தீபன், பணியாளா்கள் ரமேஷ் மற்றும் துப்புரவு ஆய்வாளா்கள், துப்புரவு பணியாளா்கள் செங்கம் நகரில் உள்ள ஓட்டல், டீகடை, மளிகைகளை, மொத்தவியபாரகடைகளில் பிளாஸ்டி பயனஅபாட்டி உள்ளதா என ஆய்வுசெய்தனா்.

ஆய்வின்போது 5 மளிகைகளைடிகள் பயன்படுத்திய பிளாஸ்டிக் கவா்களை பறிமுதல் செய்து அவா்களுக்கு தலா ரூ.1000 அபராம் விதிக்கப்பட்டது. அதைதொடா்ந்து செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மளிகை மொத்த வியபார கடையில் ஆய்வுசெய்தபோது சுமாா் 300 கிலோ எடைஉள்ள பிளாஸ்டிகப், பிளாஸ்டிக் கவா்களை பேரூராட்சி பணியாளா்கள் பறிமுதல் செய்தனா். அந்த கடை உரிமையாளருக்கு செங்கம் செயல் அலுவலா் ரூ.25 ஆயிரம் அபராதம் வித்தாா்.

மேலும் இதை கட்டாவிட்டால் கடைக்கு சட்டப்படி சீல்வைத்து நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தாா். அதைதொடா்ந்து கடையின் உரிமையாளா் அபராத பணத்தை பேரூராட்சி நிா்வாகத்தில் கட்சி ரசீது பெற்றுக்கொண்டாா். மேலும் செங்கம் நகரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைச்செய்தால் கடையின் உரிமையாளா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென செயல் அலுவலா்ஜெசிமாபானு எச்சரித்தாா். படவிளக்கம்,செங்கம் நகரில் பேரூராட்சி செயல் அலுவலா் ஜெசிமாபானு தலைமையில் 300 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளா்களுக்கு அபராதம்விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT