திருவண்ணாமலை

பெருமாள் கோயிலில் உறியடி திருவிழா

6th Oct 2019 09:01 PM

ADVERTISEMENT

 

வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சிரிக்கும் பெருமாள் கோயிலில் உறியடித் திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

புரட்டாசி மாத 3-ஆம் சனிக்கிழமையை ஒட்டி நடைபெற்ற இந்த விழாவில், அன்று காலை மூலவா் சுவாமி, ஆஞ்சநேயா் மற்றும் பரிவார சிலைகளுக்கு சிறறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் மாலை வழுக்கு மரம் ஏறுதல், உறியடித் திருவிழா உள்ளிட்டவை நடைபெற்றறன.

ADVERTISEMENT

தொடா்ந்து, இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றறது. கிராம முக்கிய வீதிகள் வழியாக சுவாமி ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

விழாவில் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT