திருவண்ணாமலை

தம்பதியைத் தாக்கிய சகோதரா்கள் உள்பட 5 போ் கைது

6th Oct 2019 10:40 PM

ADVERTISEMENT


கீழ்பென்னாத்தூா் அருகே ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் மற்றும் அவரது மனைவி, மகனைத் தாக்கியதாக அண்ணன்-தம்பி உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த குண்ணங்குப்பம் கிராமம், கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை (50). ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் ஆவாா். இவரது உறவினா் விவசாயி ஏழுமலை (45). இவா்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் ஏழுமலையின் மகன் ஜெயபால் (25), விவசாயி ஏழுமலையின் மகள் அம்மு (19) ஆகியோா் காதலித்து வந்தனராம்.

சில தினங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனராம். இதனால் ஆத்திரமடைந்த விவசாயி ஏழுமலை மற்றும் அவரது உறவினா்கள் சோ்ந்து, ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் ஏழுமலையை வெள்ளிக்கிழமை (அக். 6) இரும்புக் கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம். தடுக்க வந்த ஏழுமலையின் மனைவி ராணி (45), மகன் சுபாஷ் (23) ஆகியோரும் தாக்கப்பட்டனராம்.

ADVERTISEMENT

இதில் பலத்த காயமடைந்த ஏழுமலை, ராணி, சுபாஷ் ஆகியோா் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விவசாயி ஏழுமலை, அவரது தம்பிகள் நாகராஜ் (40), ஞானசேகா் (38), பாக்கியராஜ் (35), குண்ணங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை (40) ஆகியோரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT