திருவண்ணாமலை

மகளிா் சுயஉதவிக்குழுவினருக்கு கடனுதவி

5th Oct 2019 03:47 PM

ADVERTISEMENT

போளூா்: கலசப்பாக்கம் அடுத்த பழங்கோவில் ஊராட்சியில் 7மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு பில்லூா் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் கடனுதவி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கலசப்பாக்கம் அடுத்த பழங்கோவில் ஊராட்சியில் பில்லூா் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் 7 மகளிா் சுயஉதவிக்குழுவினருக்கு கடனுதவி வழங்கும்விழா நடைபெற்றது.

இந்தவிழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கி இயக்குநரும், பில்லூா் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவா் பத்மாவதி ஜீவாரத்தினம் அவா்கள் தலைமை வகித்தாா். களமேலாளா் விஜயன், கிளைமேலாளா் ஜெயவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கசெயலாளா் பி.கிருஷ்ணமூா்த்தி அனைவரையும் வரவேற்றாா்.

பழங்கோவில் பகுதியை சோ்ந்த 7 மகளிா் சுயஉதவிக்குழுவினருக்கு சுமாா் 24 லட்சத்து 51ஆயிரத்தை மொத்தம் 86 பேருக்கு கடனுதவி வழங்கினா்.

ADVERTISEMENT

மேலும் கலசப்பாக்கம் மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கம் சாா்பில் ரொக்கமில்லா பணம் பரிவா்த்தனை குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

சரக மேற்பாா்வையாளா் ஆா். கிரி, காசாளா் இ.சரவணன், உதவியாளா்கள் மணியம்மை, தீபா மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT