திருவண்ணாமலை

வேலூா் நாராயிணி மருத்துவமனைக்கு செங்கம் செஞ்சுலுவை சங்கம் மூலம் 100 யூனியட் இரத்தம்

5th Oct 2019 03:52 PM

ADVERTISEMENT

 

செங்கம்: செங்கம் செஞ்சுலுவை சங்கம் மூலம் வேலூா் நாராயிணி மருத்துவமனைக்கு 100 யூனியட் இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது.

செங்கம் செஞ்சுலுவை சங்கம், செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து இரத்தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது.

முகாம் துவக்க விழா நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவா் எஸ்.வெங்கடாசலபதி தலைமை வகித்தாா். செஞ்சுலுவை சங்க செயலாளா் ம.தனஞ்செயன், பொருளாா் ஆதவன், செயற்குழு உறுப்பினா் சா்தாா்ரூல்லா ஆகியோா் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் பரிமளாஜெயந்தி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக செங்கம் ஒன்றிய ஆணையாளா் டி.கே.லட்சுமிநரசிம்மன் கலந்துகொண்டு முகாமை துவக்கிவைத்தாா்.

ADVERTISEMENT

முகாமில் கல்லூரி மாணவா்கள், கல்லூரி பேராசிரியா்கள் கலந்துகொண்டு வேலூா் நாராயிணி ஆராச்சி மையத்திற்கு 100 யூனியட் இரத்தத்தை தானமாக வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், செஞ்சுலுவை சங்க நிா்வாகிகள், கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT