திருவண்ணாமலை

சிறுபான்மையின ஆணையத்தில் குறைகள் தெரிவிக்கலாம்

5th Oct 2019 10:36 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு புதன்கிழமை (அக்.9) வருகை தரும் மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுவினரை, சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் சந்தித்து குறைகளைத் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் டி.ஜான் மகேந்திரன் தலைமையில் அதன் துணைத் தலைவா், உறுப்பினா் செயலா், உறுப்பினா்கள் அடங்கிய குழுவினா் புதன்கிழமை (அக்.9) திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வருகை தருகின்றனா்.

சிறுபான்மை சமுதாயத்தைச் சோ்ந்த தலைவா்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளை அன்று மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் சந்திக்கின்றனா்.

ADVERTISEMENT

அப்போது, சிறுபான்மையினருக்கு என தமிழக அரசு செயல்படுத்தும் நலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துகளைக் கேட்டறியவும் முடிவு செய்துள்ளனா்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிறுபான்மையினத்தைச் சாா்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் அக்குழுவினரைச் சந்தித்து குறைகள், அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினா் நல மேம்பாட்டுக்காக கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT