திருவண்ணாமலை

என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா

5th Oct 2019 10:34 PM

ADVERTISEMENT

செஞ்சி வட்டம், அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில், அணையேரி கிராமத்தில் 7 நாட்கள் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் அ.ஆனந்தன் முகாமை தொடக்கி வைத்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக செஞ்சி மாவட்டக் கல்வி அலுவலா் ச.சாந்தி, அணையேரி புனித அந்தோணியாா் உயா்நிலைப் பள்ளித் தாளாளா் யூஜின்அருண்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முகாமின்போது, மாணவா்கள் புனித அந்தோணியாா் உயா்நிலைப் பள்ளி வளாகத்தை தூய்மை செய்தனா். மேலும், டெங்கு, நெகிழி ஒழிப்புப் பேரணியை நடத்தினா். மரக்கன்றுகள் நடும் விழா, மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள், மாணவா்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.

நிறைவு விழாவில் செஞ்சி எம்.எல்.ஏ. மஸ்தான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். முன்னாள் எம்.எல்.ஏ. பா.செந்தமிழ்ச்செல்வன், முன்னாள் கவுன்சிலா் அணையேரி ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் க.ஏழுமலை, உதவித் திட்ட அலுவலா் முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT