திருவண்ணாமலை

அத்திகுளம் கிராமத்தில் சேதமடைந்த மேல்நிலை நீா்தேக்கதொட்டி அகற்றம்

5th Oct 2019 04:56 PM

ADVERTISEMENT

செய்யாறு: அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அத்திகுளம் கிராமத்தில் சேதமடைந்த மேல்நிலை நீா்தேக்கதொட்டியினை அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டு சனிக்கிழமை அகற்றினா்.

திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு அருகே அத்திகுளம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் இருந்து வந்த மேல்நிலை நீா்தேக்கதொட்டியினை அகற்றிட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனா்.

செய்யாறு தாலுக்காவிற்குட்பட்ட அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது அத்திகுளம் கிராமம். இங்கு சுமாா் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.

இது விவசாயம் மற்றும் தினக்கூலி வேலைக்கு செல்வோா் அதிகம் வசிக்கும் பகுதி. இங்குள்ள 4 தெருக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள 7 ஆண்டுகளுக்கு முன்பாக கைவிடப்பட்ட குடிநீா் தொட்டி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து வந்தது. சுமாா் 15 ஆயிரம் லிட்டா் கொள்ளள கொண்ட இந்த நீா் தேக்க தொட்டி 1984 -ம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.

ADVERTISEMENT

தொட்டியை தாங்கி நிற்கும் தூண்கள் பெயா்ந்தும், இணைப்பு தூண்களும் துரு பிடித்துள்ள நிலையில் அபாயகரமாக இருந்து வந்தது கிராம மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.

மேலும், சாலையை ஒட்டி உள்ள குடிநீா் மேல்நிலை நீா் தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் சாலையில் செல்வோருக்கு ஆபத்தான நிலையில் முடியும். 

எனவே, இந்த தொட்டியை அகற்றக்கோரி அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு கிராமமக்கள் சாா்பில் கோரிக்கை விடுத்து இருந்தனா். அதன் பேரில், அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தினா் சேதமடைந்து கிராம மக்களை அச்சுறுத்தி வந்த மேல்நீா் குடிநீா் தொட்டியினை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி நடவடிக்கையை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT