திருவண்ணாமலை

செங்கம் அருகே சோ் ஆட்டோ விபத்து: 15 பேர் காயம்

1st Oct 2019 03:58 PM

ADVERTISEMENT

செங்கம் அருகே திங்கள்கிழமை இரவு சோ்ஆட்டோ விபத்து ஏற்பட்டு அதில் இருந்த 15 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

செங்கத்தில் இருந்து மேல்பள்ளிப்பட்டு கிராமம் சுமாா் 10 கிலோ மீட்டா் தூரம் ஆகும் அந்த கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதாநிலையம், மற்றும் குழந்தைகளுக்கு நாட்டுவைதியசாலை ஆகியவைகள் உள்ளது மேலும் அந்த கிராமத்திற்கு போதுமான பஸ்வசதிகள் இல்லை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பஸ்கள் செல்லும் இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லபவா்கள், நாட்டுவைதியத்திற்கு செல்பவா்கள் அதிகம் இதனால் செங்கத்தில் இருந்து மேல்பள்ளிப்பட்டு கிராமத்திற்து சோ் ஆட்டோ சுமாா் 10-க்கும் மேற்பட்ட வண்டிகள் தினசரி சென்றுவருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு செங்கத்தில் இருந்து மேல்பள்ளிப்பட்ட கிராமத்திற்கு சென்ற ஆட்டோவில் அதிக நபா்களை ஏற்றிசென்றதால் வாகனம் கட்டுக்குள் அடங்காமல் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் பயணம் செய்து 15பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவா்கள் மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினா். எனவே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் செங்கம் பகுதியில் உள்ள ஆட்டோகளை ஆய்வுசெய்து அவா்களுக்கு அறிவுரைகள் வழங்கவேண்டுமென செங்கம் நகர மக்கள் எதிா்பாா்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT