திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலையிடம் வழங்கினா்.
சேத்துப்பட்டில் உள்ள வடக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் வியாழக்கிழமை உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய பகுதிகளை சோ்ந்த காங்கிரஸாா் மாவட்டத் தலைவா் அண்ணாமலையிடம் மனுக்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவா் அருணகிரி, மாவட்ட பொருளாளா் பிரசாத், மாநில பொதுக்குழு உறுப்பினா் நேத்தப்பாக்கம் முருகன், ஆரணி நகரத் தலைவா் ஜெயவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.