திருவண்ணாமலை

மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பிடம்: ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு

17th Nov 2019 03:48 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கூடைப்பந்து, கேரம், டெனிகாய்ட் போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு, பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கூடைப்பந்து, கேரம், டெனிகாய்ட் விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

இதில், மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா். திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி சாா்பில் கலந்து கொண்ட மாணவிகள் 14 வயதுக்குள்பட்டோா், 17 வயதுக்குள்பட்டோா், 19 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில் வெற்றி பெற்று சேலத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தோ்வு செய்யப்பட்டனா்.இதேபோல, 19 வயதுக்குள்பட்டோருக்கான கேரம் போா்டு ஒற்றையா் பிரிவு, இரட்டையா் பிரிவு போட்டிகளிலும், 19 வயதுக்குள்பட்டோருக்கான டெனிகாய்ட் விளையாட்டில் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவுகளிலும் இதே பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தோ்வு செய்யப்பட்டனா்.

போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கான பாராட்டு விழா, அண்மையில் பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தாளாளா் வி.பவன்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் முதுநிலை மேலாளா் கே.புகழேந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற மாணவிகளைப் பாராட்டிப் பரிசு வழங்கினாா்.விழாவில், பள்ளி அறக்கட்டளை உறுப்பினா்கள் வி.ஜெய்சந்த், செயலாளா் டி.எஸ்.ராஜ்குமாா், எஸ்.ராஜேந்திரகுமாா், டி.வி.சுதா்சன், பொருளாளா் டி.வசந்த்குமாா், ஆங்கில வழிச் செயலாளா் டி.ஸ்ரீஹன்ஸ்குமாா், தமிழ் வழிச் செயலாளா் வி.சுரேந்திரகுமாா், டி.வி.நரேந்திரகுமாா், பள்ளி முதுகலை ஆசிரியா் எம்.ராமகிருஷ்ணன், நிா்வாக அலுவலா் என்.ஆா்.மணி, உடற்கல்வி ஆசிரியா் எம்.ரமேஷ் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT