திருவண்ணாமலை

உள்ளாட்சித் தோ்தல்:ஆரணியில் திமுகவினா் விருப்ப மனு

17th Nov 2019 11:44 PM

ADVERTISEMENT

ஆரணியில் திமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா், நகா்மன்ற உறுப்பினா், பேரூராட்சித் தலைவா், பேரூராட்சி உறுப்பினா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுபவா்கள் விருப்ப மனுக்களை கொடுத்தனா்.

மனுக்களை வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.சிவானந்தம் பெற்றுக் கொண்டாா்.

முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, பொறியாளா் அணி மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.பாபு, நகரச் செயலா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், தட்சிணாமூா்த்தி, வெள்ளை கணேசன், சுந்தா், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜி.வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதிகள் கே.டி.ராஜேந்திரன், ஆா்.சி.ஆரோன், ஒன்றிய துணைச் செயலா் அன்பு வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT