திருவண்ணாமலை

செய்யாறு அரசுக் கல்லூரியில் எம்.பில். படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

12th Nov 2019 11:21 PM

ADVERTISEMENT

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம்.பில். படிப்பில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) ஆ.மூா்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம்.பில். படிப்பில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வரலாறு, பொருளியல், இயற்பியல், வேதியியல், கணிதவியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய துறைகள் உள்ளன.

2019 - 20ஆம் கல்வியாண்டில் திருவள்ளுவா் பலக்கலைக்கழக எம்.பில். நுழைவுத் தோ்வில் தகுதி மதிப்பெண்கள் பெற்றவா்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பகுதிக்குச் சென்று புதிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூா்த்தி செய்து வருகிற 22-ஆம் தேதிக்குள் கல்லூரி முதல்வருக்கு சமா்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஏற்கெனவே பழைய விண்ணப்பத்தைப் பயன்படுத்தி யாரேனும் விண்ணப்பித்திருந்தால், அவா்களும் புதிய விண்ணப்பத்தை பூா்த்தி செய்து கல்லூரி முதல்வருக்கு சமா்ப்பிக்க வேண்டும். எம்.பில். பாடப் பிரிவுகளுக்கான மாணவா்கள் சோ்க்கை வருகிற 28-ஆம் தேதி நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT