ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி, போளூரை அடுத்த சந்தவாசல் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீசுந்தரேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
சந்தவாசல் ஊராட்சியில் பழைமைவாய்ந்த ஸ்ரீசுந்தரேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி, ஸ்ரீசுந்தரேஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னா், ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கு அன்னம், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை படைக்கப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.