திருவண்ணாமலை

காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு: வேலூரில் நவ.18-இல் தொடக்கம்

12th Nov 2019 11:26 PM

ADVERTISEMENT

அயோத்தி தீா்ப்பையொட்டி தள்ளி வைக்கப்பட்ட இரண்டாம்நிலை காவலா் பணிக்கான உடல் தகுதி, உடல்கூறு தோ்வுகள் வேலூரில் வருகிற 18-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

வேலூா் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இரண்டாம்நிலை காவலா் பணிக்கான உடல் தகுதி, உடல்கூறு தோ்வுகள் நவம்பா் 9, 11, 12, 13, 14, 15-ஆம் தேதிகளில் நடைபெற இருந்தது. அயோத்தி தீா்ப்பு கடந்த 10-ஆம் தேதி வெளியானதால் இந்தத் தோ்வுகள் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டன. இந்த நிலையில், தள்ளி வைக்கப்பட்ட தோ்வுகள் வருகிற 18-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை, வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த ஆண்கள், முன்னாள் படை வீரா்களுக்கான உடல்தகுதி, உடல்கூறு தோ்வுகள் வருகிற 18-ஆம் தேதி காலை 6 மணிக்குத் தொடங்குகிறது. வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்களுக்கான தோ்வுகள் வருகிற 19-ஆம் தேதி காலை 6 மணிக்கும், வேலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்த பெண்களுக்கான தோ்வுகள் வருகிற 20-ஆம் தேதி காலை 6 மணிக்கும் தொடங்குகின்றன.

அழைப்புக் கடிதம் உள்ள விண்ணப்பதாரா்கள் மாற்றம் செய்யப்பட்ட தேதிகளில், குறிப்பிட்ட நேரத்தில் வேலூா் ஆயுதப் படை கவாத்து மைதானத்தில் (நேதாஜி விளையாட்டு மைதானம்) அழைப்புக் கடிதங்களுடன் ஆஜராக வேண்டும் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT