திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் கலை அரங்கம் அமைக்க பூமி பூஜை

12th Nov 2019 06:28 AM

ADVERTISEMENT

கலசப்பாக்கம் அருகே மேலாரணிஅரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கலை அரங்கம் அமைக்க திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் ரூ.15 லட்சத்தில் மேலாரணிஅரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கலை அரங்கம் அமைப்பதற்கான பணிகளை வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

மேலும், மேலாரணி ஊராட்சி பொதுமக்களுக்கு குடிநீா் வழங்க தொகுதி நிதியில் அப்பகுதியில் உள்ள ஏரி அருகே ரூ.10 லட்சத்தில் திறந்தவெளிக் கிணறு அமைக்கப்பட்டது.

இந்தக் கிணற்று நீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய மோட்டாா் அமைத்து குடிநீா் வழங்க ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி, ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் ஜெயராமன், முன்னாள் துணைத் தலைவா் கருணாமூா்த்தி, பள்ளித் தலைமை ஆசிரியை பரிமளா மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT