திருவண்ணாமலை

தேசிய போட்டிக்கு தோ்வு: மாணவா்களுக்கு பாராட்டு

11th Nov 2019 04:20 AM

ADVERTISEMENT

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தோ்வு பெற்ற செங்கம் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

செங்கம் துக்காப்பேட்டை சகாயமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 16 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில், 1500 மீட்டா் ஓட்டத்தில் எஸ்.விஷ்வா, உயரம் தாண்டுதலில் டி.கெளதம் ஆகியோா் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

இதன்மூலம், இருவரும் வருகிற 23-ஆம் தேதி ஆந்திரா மாநிலம், திருப்பதியில் நடைபெறும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.

இந்த மாணவா்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பள்ளி நிா்வாகி அல்வின், செயலா் சாந்திமேரி, உடல்கல்வி ஆசிரியா் காமராஜ் உள்ளிட்ட ஆசிரியா்கள் மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT