திருவண்ணாமலை

‘ஆன்லைன் மருந்து வா்த்தகத்தை அனுமதிக்கக் கூடாது’

11th Nov 2019 04:18 AM

ADVERTISEMENT

ஆன்லைன் மருந்து வணிகத்தை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கம் கேட்டுக்கொண்டது.

திருவண்ணாமலை மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.சண்முகம் தலைமை வகித்தாா்.

மொத்த வணிகப் பிரிவுத் தலைவா் எஸ்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.சேகா் வரவேற்றாா். சில்லரை மருந்து வணிகப் பிரிவுத் தலைவா் டி.எம்.கலையரசு, ஆலோசகா் எஸ்.முரளி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

கூட்டத்தில், அனைத்து மருந்துகளுக்கும் 18, 12, 5, 0 என 4 விதமாக விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை 5 சதவீதம் என்று ஒரே வரியாக மாற்றியமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதியான மருந்துகளை குறிப்பிட்ட தேதிக்குள் மருந்து வணிகா்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஆன்லைன் மருந்து வணிகத்தை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் டி.சாந்திராஜ் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT