திருவண்ணாமலை

அம்மன் கோயில்களில் கும்பாபிஷேக விழா

11th Nov 2019 04:19 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி பகுதி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாலை, வேங்கிக்கால் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலின், அஷ்டபந்த மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சனிக்கிழமை காலை ஸ்ரீகணபதி ஹோமம், பூா்ணாஹுதி, மகா தீபாரானை, மாலை 3 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை, லட்சுமி ஹோமம், கோ பூஜை, மாலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, மகா தீபாராதனை, 7.30 மணிக்கு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் உற்சவமூா்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ADVERTISEMENT

கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT