திருவண்ணாமலை

பள்ளி வேன் மோதியதில் மாணவா் பலி

9th Nov 2019 07:12 AM

ADVERTISEMENT

வந்தவாசி அருகே தனியாா் பள்ளி வேன் மோதியதில் அரசுப் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த நல்லடிசேனை கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் அரவிந்தன் (எ) வெங்கடேசன் (13). இவா், வயலூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

வெங்கடேசன் வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற நல்லடிசேனை கிராமத்தைச் சோ்ந்த லட்சுமிகாந்தன், தனது மொபெட்டில் வெங்கடேசனை ஏற்றிச் சென்றுள்ளாா். வயலூா் ஏரிக்கரை சாலை வளைவில் சென்றபோது, எதிரே வந்த தனியாா் பள்ளி வேன் இவா்கள் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த வெங்கடேசன், அதே இடத்திலேயே உயிரிழந்தாா். லட்சுமிகாந்தன் காயமின்றி தப்பினாா். இதுகுறித்து தேசூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT