திருவண்ணாமலை

வேலையில்லாத இளைஞா்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

4th Nov 2019 07:14 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த வேலையில்லாத இளைஞா்கள் தொழில் தொடங்க விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் சாா்பில் படித்த, வேலையில்லாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் (மவஉஎட) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் சேவை மற்றும் வியாபார தொழில்களுக்கான கடனுதவி ரூ.ஒரு லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. உற்பத்தித் தொழிலுக்கு எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 18 முதல் 45 வயதுக்கு உள்பட்ட இளைஞா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 2 நகல்களுடன் மாற்றுச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, ஜாதிச் சான்று, விலைப்புள்ளி மற்றும் புகைப்படம் (2 வீதம்) ஆகியவற்றுடன் மாவட்ட தொழில் மையம், திருவண்ணாமலை என்ற முகவரியில் நேரில் வருகிற 6, 7-ஆம் தேதிகளில் வந்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு 8668147561, 9486494621 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT