திருவண்ணாமலை

லட்சுமி நரசிம்மா் கோயிலில் திருப்பாவாடை உத்ஸவம்

4th Nov 2019 07:16 AM

ADVERTISEMENT

பெரணமல்லூா் அருகேயுள்ள லட்சுமி நரசிம்மா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பாவாடை உத்ஸவத்தில் பக்தா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் பகுதியில் பழைமை வாய்ந்த லட்சுமி நரசிம்மா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஐப்பசி மாதத்தை முன்னிட்டு திருப்பாவாடை உத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்று அதிகாலை மூலவா் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து பட்டாச்சாரியாா் முகுந்தன் முன்னிலையில் உற்சவ மூா்த்திகள் ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், பல்வகை பிரசாதங்கள் உற்சவ மூா்த்திக்கு படைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறையினா் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT