சேத்துப்பட்டு அருகே மணல் கடத்தியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். மேலும் அவரிடம் இருந்து டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.
சேத்துப்பட்டு அருகேயுள்ள ராந்தம், கங்காபுரம், ஊத்தூா், பத்தியாவரம், ஓதலவாடி ஆகிய பகுதிகளில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில், சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளா் பாா்த்தசாரதி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, ராந்தம் பகுதி செய்யாற்றுப் படுகையிலிருந்து டிராக்டரில் மணல் ஏற்றி வந்த ஏழுமலை என்பவரை போலீஸாா் விசாரித்தனா். இதில், அனுமதி பெறாமல் ஆற்றில் இருந்து மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாா் ஏழுமலையை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனா்.