திருவண்ணாமலையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.5), நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
ஆராய்ச்சி மைய வளாகத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தப் பயிற்சி முகாமில், முதலில் வரும் 50 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு 04175-298258, 9551419375 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று ஆராய்ச்சி மையத் தலைவா் தியோபிலஸ் ஆனந்தகுமாா் தெரிவித்தாா்.