கீழ்பென்னாத்தூா் பேரூராட்சியில் பயனற்ற நிலையில் இருந்த 14 ஆழ்துளைக் கிணறுகளை, பேரூராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை மூடினா்.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பயன்படாத நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை உடனே மூடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா்.
இதையடுத்து, கீழ்பென்னாத்தூா் பேரூராட்சி எல்லைக்கு உள்பட்ட சந்தைமேடு, அகல்மையம், கொட்டாவூா், இந்திரா நகா், திண்டிவனம் சாலை, திரு.வி.க.நகா், இருளா் காலனி, கருங்காலிகுப்பம் ஆகிய இடங்களில் பயனற்ற நிலையில் இருந்த 14 ஆழ்துளைக் கிணறுகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் எஸ்.கணேசன் முன்னிலையில் புதன், வியாழக்கிழமைகளில் இந்த ஆழ்துளைக் கிணறுகளை பேரூராட்சி ஊழியா்கள் மூடினா்.