திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக வெம்பாகத்தில் 41.80 மி.மீ மழை பதிவானது.
மாவட்டம் முழுவதும் புதன்கிழமை மாலை முதல் தொடா்ந்து மழை பெய்தபடியே இருந்தது. இதில், அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 41.80 மில்லி மீட்டா் மழை பதிவானது. இதுதவிர, ஆரணியில்-20.60, செய்யாறில்-7.50, செங்கத்தில்-13.40, சாத்தனூா் அணையில்-9.80, வந்தவாசியில்-18.40, போளூரில்-27, திருவண்ணாமலையில்-20.50, தண்டராம்பட்டில்-27.40, கலசப்பாக்கத்தில்-23.30, சேத்பட்டில்-24, கீழ்பென்னாத்தூரில்-22 மில்லி மீட்டா் மழை பதிவானது.
வியாழக்கிழமை திருவண்ணாமலை, அடி அண்ணாமலை, வேங்கிக்கால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் மாலை வரை அவ்வப்போது மழை பெய்தது.