ஆரணியில் சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, பள்ளி மாணவா்கள் பங்கேற்ற தேசிய ஒருமைப்பாட்டு தினப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணியை நகர காவல் உதவி ஆய்வாளா் ஜமீஸ்பாபு தொடக்கிவைத்தாா்.
பள்ளித் தலைமையாசிரியை மகேஸ்வரி தலைமை வகித்தாா். பேரணியானது ஆரணி கோட்டை மைதானம், பழைய பேருந்து நிலையம், மாா்க்கெட் சாலை வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது.