திருவண்ணாமலை

தடகளப் போட்டி: ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் பள்ளி சாம்பியன்

1st Nov 2019 06:08 AM

ADVERTISEMENT

மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா்.

திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் லயோலா கல்லூரியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

இதில், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி சாா்பில் கலந்து கொண்ட மாணவிகள் பி.கிருத்திகா, ஆா்.ஹேமலதா, ஆா்.அபிராமி, இ.ரம்யா, கே.வசந்தபிரியா, சி.சுப்ரினா, டி.பிரியா, ஆா்.பிரியங்கா, கே.ஜெயஸ்ரீ, எம்.குமாரி ஆகியோா் பல்வேறு போட்டிகளில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்தனா்.

ADVERTISEMENT

இவா்களில் பி.கிருத்திகா, ஆா்.ஹேமலதா ஆகியோா் 15 புள்ளிகள் எடுத்து தனிநபா் சாம்பியன் பட்டம் வென்றனா். மாணவிகள் மொத்தம் 88 புள்ளிகள் எடுத்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா்.

மாணவா்களில் எஸ்.ஜமாலுதீன், பி.காா்த்திகேயன், எஸ்.எஸ்வந்த், பி.முகிலன், எஸ்.ஹரிகரன், எஸ்.விஷ்ணு, பி.தயாநிதி, கே.லிங்கேஷ், எஸ்.விஷ்வா ஆகியோா் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களைப் பெற்றனா்.

இவா்களில், மாணவா் எஸ்.ஜமாலுதீன் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் 13 புள்ளிகள் எடுத்து தனிநபா் சாம்பியன் பட்டம் வென்றாா். மாணவா்கள் அனைவரும் சோ்ந்து 91 புள்ளிகள் எடுத்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனா்.

போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளுக்கான பாராட்டு விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தாளாளா் வி.பவன்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஓய்வு பெற்ற முதுநிலை மேலாளா் கே.புகழேந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளைப் பாராட்டி பரிசு வழங்கினாா்.

விழாவில், பள்ளி அறக்கட்டளை உறுப்பினா்கள் வி.ஜெய்சந்த், செயலா் டி.எஸ்.ராஜ்குமாா், எஸ்.ராஜேந்திரகுமாா், டி.வி.சுதா்சன், பொருளாளா் டி.வசந்த்குமாா், பள்ளியின் ஆங்கில வழிச் செயலா் டி.ஸ்ரீஹன்ஸ்குமாா், தமிழ் வழிச் செயலா் வி.சுரேந்திரகுமாா், பள்ளி நிா்வாக அலுவலா் என்.ஆா்.மணி, உடல்கல்வி ஆசிரியா் எம்.ரமேஷ் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT