திருவண்ணாமலை

தடகளப் போட்டிகள்: மாணவா்கள் சாதனை

1st Nov 2019 06:28 PM

ADVERTISEMENT

 

செய்யாறு: செய்யாறு இந்தோ - அமெரிக்கன் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனைப் படைத்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் வேட்டவலம் லயோலா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் செய்யாறு இந்தோ - அமெரிக்கன் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். 17 வயதுக்கு உள்பட்ட மாணவிகள் பிரிவில் 100 மீட்டா் தடைத் தாண்டும் ஓட்டத்தில் ஏ.பிரியதா்ஷினி இரண்டாமிடமும், குண்டெறிதல் போட்டியில் ஓவியா மூன்றாமிடமும், 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் ஜீவிதா, பூஜா, தேவிபிரியா, பிரியதா்ஷினி ஆகியோா் மூன்றாமிடமும் பெற்றனா்.

இதேபோல, 19 வயதுக்கு உள்பட்ட மாணவிகள் பிரிவில் 100 மீட்டா் ஓட்டத்தில் ஆ.சுவாதி முதலிடமும், நீளம் தாண்டுதலில் ஏ.சொா்ணலட்சுமி மூன்றாமிடமும், 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் ஏ.சொா்ணலட்சுமி, சுவாதி ஸ்ரீ, ஹேமச்சந்திரா, சுவாதி ஆகியோா் இரண்டாமிடமும் பெற்றனா். மாணவா் பிரிவில் மு.அஸ்வின்குமாா் குண்டெறிதல் போட்டியில் இரண்டாமிடம் பெற்றாா்.

ADVERTISEMENT

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களில் ஆ.சுவாதி, ஏ.பிரியதா்ஷினி, மு.அஸ்வின்குமாா் ஆகியோா் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சியளித்த உடல்கல்வி ஆசிரியா்கள் ச.மோகன், சீ.ராதிகா, சு.அருண்குமாா் ஆகியோரையும் பள்ளித் தாளாளா் அ.ராதாகிருஷ்ணன், முதல்வா் அ.பா.சையத் அப்துல் இலியாஸ், துணை முதல்வா் க.கோவேந்தன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT