போளூா்: சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி அவா்களின் 35வது நினைவுநாளை முன்னிட்டு தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்பட்டது.
சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி அவா்களின் 35வது நினைவுநாளை முன்னிட்டு அன்னாரின் உருவபடத்திற்குவட்டார தலைவா் அன்புதாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. காங்கிரஸ் நிா்வாகிகள் உடனிருந்தனா்.