நாளை முதல் 5 இடங்களில் உயர் கல்வி ஆலோசனை மையங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தின் 5 இடங்களில் மே 2-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் உயர்கல்வி ஆலோசனை மையங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில்

திருவண்ணாமலை மாவட்டத்தின் 5 இடங்களில் மே 2-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் உயர்கல்வி ஆலோசனை மையங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் அடுத்ததாக எந்த மாதிரியான உயர் கல்வியை தேர்வு செய்து படிக்கலாம், வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள் என்னென்ன, தொழில் சார்ந்த படிப்புகள் என்னென்ன என்பது குறித்த வழிகாட்டுதல் வழங்க மாவட்ட கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ஓய்வு பெற்ற அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களைக் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 5 கல்வி மாவட்டங்களிலும் தலா ஒரு ஆலோசனை மையம் அமைக்கப்பட்டு உயர் கல்வி ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 திருவண்ணாமலையில்: திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் உயர்கல்வி ஆலோசனை மைய ஒருங்கிணைப்பாளர்களாக எஸ். மிதுன்கார்த்திக் (செல்: 9486422533), பி.சேகர் (செல்: 9788628247) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 செங்கம்: செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் உயர்கல்வி ஆலோசனை மைய ஒருங்கிணைப்பாளர்களாக சி.பென்னி (செல்: 9786449480), கமால்பாஷா (செல்: 9442458126) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 போளூர்: போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் உயர் கல்வி ஆலோசனை மைய ஒருங்கிணைப்பாளர்களாக எஸ்.ஞானசம்பந்தன் (செல்: 9486258923), சி.டேவிட் (செல்: 9751990242) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 ஆரணி: ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் உயர் கல்வி ஆலோசனை மைய ஒருங்கிணைப்பாளர்களாக சி.டி.சிவசுப்பிரமணியன் (செல்: 9486082080), எம்.கங்காதரன் (செல்: 9364562838) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 செய்யாறு: செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் உயர் கல்வி ஆலோசனை மைய ஒருங்கிணைப்பாளர்களாக கே.சீனிவாசன் (செல்: 8098684646), இ.ராஜேந்திரன் (செல்: 8668027278) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் வியாழக்கிழமை (மே 2) முதல் மே 31-ஆம் தேதி வரை மேற்கண்ட இடங்களில் நடைபெறும் ஆலோசனை மையங்களில் கலந்து கொண்டு உயர்கல்வி சார்ந்த ஆலோசனைகளைப் பெறலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com