தமிழகத்தில் மலேரியாவை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை: விழிப்புணர்வு முகாமில் தகவல்

2022-க்குள் தமிழகத்திலிருந்து மலேரியா நோயை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டது.

2022-க்குள் தமிழகத்திலிருந்து மலேரியா நோயை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டது.
 செய்யாறை அடுத்த நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மலேரியா தினம் குறித்த விழிப்புணர்வு முகாம் இராந்தம் கிராமத்தில் நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதார ஆய்வாளர்கள் கே.சம்பத், எம்.சீனிவாசன் ஆகியோர் கிராம மக்களிடம் மலேரியா நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
 மலேரியா நோயின் அறிகுறிகள்: ஐந்து முதல் ஏழு நாள்கள் காய்ச்சல், குளிருடன் கூடிய நடுக்கம், உடல் வலி, தலைவலி, நினைவு இழத்தல், நடக்க முடியாமை, மயக்கம், வாந்தி, சிறுநீர் பிரியாத நிலை, வயிற்றுப் போக்கு ஆகியவை மலேரியா நோயின் அறிகுறிகளாகும். இந்நோயை அறிந்து கொள்ள ரத்த தடவல் பரிசோதனை செய்யப்படுகிறது.
 திறந்தவெளி நீர் ஓடைகள், மழை நீர் தேங்கும் தேவையற்ற பொருள்கள், வயல் வெளிகள், குளம், குட்டை, வாய்க்கால், கீழ்நிலை, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், வீடு கட்டுமானப் பணியிடங்கள் போன்ற இடங்களில் கொசுக்கள் மூட்டையிட்டு லார்வா, பியுபா, மூதிர்கொசு முறைகளில் வளர்ச்சி அடைகிறது.
 இதனை கட்டுப்படுத்த உயிரியல் முறைப்படி கம்போசியா மீன் வகைகளை நீர் நிலைகளில் விட்டு கொசுப் புழுக்களை அழிக்கலாம், மூதிர் கொசுக்களை புகை மருந்து கொண்டு அழிக்கலாம்.
 தடுக்கும் முறைகள்: மக்கள் மலேரியா நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வீடுகளில் ஜன்னல், கதவுகளுக்கு கொசு வலை அடித்தல் கொசு விரட்டிகளை பயன்படுத்துதல் கொசு வலையில் தூங்குதல் போன்ற முறைகளை கையாளவேண்டும் என்றும், 2022-க்குள் தமிழகத்திலிருந்தும், 2030-க்குள் இந்தியாவில் இருந்தும் மலேரியா நோயை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன எனத் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com