இருளர் சமூக ஏழை மாணவி நர்சிங் படிக்க ஏற்பாடு: மாவட்ட ஆட்சியருக்கு நன்றி

உயர்கல்வி பயில முடியாமல் தவித்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி செவிலியர் பட்டப்படிப்பு பயில ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமிக்கு, கொத்தடிமையாக இருந்து

உயர்கல்வி பயில முடியாமல் தவித்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி செவிலியர் பட்டப்படிப்பு பயில ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமிக்கு, கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
 வந்தவாசியை அடுத்த காவனியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன் (50). இவரது மனைவி வசந்தி. இருளர் சமூகத்தைச் சேர்ந்த இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் 2013-இல் திருவள்ளுர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த பூச்சி அத்திப்பட்டு கிராமத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்து வருவாய்த்துறை மூலம் மீட்கப்பட்டனர். ஏழ்மை காரணமாக தனது முதல் 3 பிள்ளைகளை சடையன் படிக்க வைக்கவில்லை. இளைய மகள் சுகன்யா (18) என்பவரை பல்வேறு சிரமங்களுக்கு இடையே பிளஸ் 2 வரை படிக்க வைத்தார். இதில், 600-க்கு 266 மதிப்பெண்கள் எடுத்து சுகன்யா தேர்ச்சி பெற்றார்.
 உயர்கல்வி பயில முடியாமல் தவித்த சுகன்யா குறித்த தகவல் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமிக்கு தெரியவந்தது.
 இதையடுத்து, வந்தவாசி அருகே உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் 3 ஆண்டுகள் செவிலியர் பட்டப் படிப்பை கட்டணம் இல்லாமல் படிக்க மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஏற்பாடு செய்தார்.
 இதையடுத்து, மாணவி சுகன்யாவை அந்தக் கல்லூரி நிர்வாகம் சேர்த்துக்கொண்டது. இந்த நிலையில், மாணவி சுகன்யா தனது பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
 அப்போது, சுகன்யாவுக்கு புதுத்துணி, இனிப்பு, பழங்களை வழங்கி ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வாழ்த்து தெரிவித்தார். இதன்பிறகு மாவட்ட ஆட்சியருக்கு சடையன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com