அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உபரியாக உள்ள 440 ஆசிரியர் பணியிடங்களை தக்கவைக்க, மாவட்டத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் உபரியாக உள்ள 440 ஆசிரியர் பணியிடங்களை தக்கவைக்க, மாவட்டத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
 திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளிகளின் உள்கட்டமைப்பு, கல்வித் தரம், ஆங்கில வழி, நலத் திட்டங்கள் ஆகியவற்றை பொதுமக்களிடம் எடுத்துக் கூறவேண்டும்.
 மேலும், பள்ளிகளின் பெருமைகளைத் தெரிவித்து, மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த விளம்பரப் பலகைகளை பள்ளிகள் சார்பில் வைக்கப்பட வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், 2019 மே முதல் வாரத்தில் 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிக அளவில் செய்ய வேண்டும். இப்போது ஆசிரியர் மாணவர் விகிதாசார அடிப்படையில் உபரியாக உள்ள 440 ஆசிரியர் பணியிடங்களை தக்க வைக்க வேண்டுமெனில் மாணவர்-சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் சாலைப் பாதுகாப்பு குழுக்கள் முழு அளவில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com