திருவண்ணாமலையில் பைக் பெட்டியை உடைத்து, ரூ. ஒரு லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை வேங்கிக்கால், பாலகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுப்பிரமணி (43). இவர், வியாழக்கிழமை திருவண்ணாமலையில் உள்ள ஒரு வங்கியில் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.60 லட்சத்தை எடுத்துக்கொண்டு பைக்கில் திருவண்ணாமலை,
கனகராயர் தெருவில் உள்ள உணவகத்துக்குச் சென்றார்.
உணவகம் எதிரே பைக்கை நிறுத்திய சுப்பிரமணி, பைக் பெட்டியில் ரூ. ஒரு லட்சத்தை வைத்துவிட்டு மீதமுள்ள ரூ.60 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு உணவகத்துக்குள் சாப்பிடச் சென்றாராம்.
திரும்பி வந்து பார்த்தபோது, பைக் பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.ஒரு லட்சம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுப்பிரமணி அளித்த புகாரின்பேரில், திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.