செங்கம் அருகே நீப்பத்துறையில் அமைந்துள்ள சென்னியம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.
செங்கத்தை அடுத்த நீப்பத்துறையில் அலமேலு மங்கை பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், சென்னியம்மன் மற்றும் ஆளுடையான் தேவஸ்தானம் அமைந்துள்ளது.
இங்கு 74-ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. தொடர்ந்து, சிறப்பு
அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, தினம்தோறும் இரவு சிம்ம வாகனம், அனுமந்த வாகம், கருட வாகனம், சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா வாணவேடிக்கையுடன் நடைபெறுகிறது. மேலும், சுவாமிக்கு திருக்கல்யாண உத்ஸவமும் நடைபெறும். ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆடி 18-ஆம் நாள் ஆடிப்பெருக்கு விழா நடைபெறும்.
விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு, பெங்கல் வைத்து சென்னியம்மனுக்கு படைத்து வழிபடுவார்கள்.
பக்தர்களின் வசதிக்காக, சேலம், தருமபுரி, அரூர், ஊத்தங்கரை, திருவண்ணாமலை, செங்கம் ஆகிய பகுதிகளில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.
ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் வெ.செல்வரங்கன், வெ.கோகுலவாணன் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.