திருவண்ணாமலை

ரேணுகாம்பாள் கோயிலில் குடிநீர் இயந்திரம் தொடக்கிவைப்பு

29th Jul 2019 09:59 AM

ADVERTISEMENT

போளூரை அடுத்த படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் பக்தர்களின் தேவைக்காக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் தொடக்கிவைக்கப்பட்டது. 
இந்தக் கோயிலில் ஆடி வெள்ளி விழா நடைபெற்று வருகிறது. விழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 
புதுவை உள்பட அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பக்தர்களுக்கு தூய்மையான, சுகாதாரமான குடிநீர் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது. இந்த இயந்திரத்தை தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் சனிக்கிழமை தொடக்கிவைத்தார். 
நிகழ்ச்சியில், ஆரணி கோட்டாட்சியர் மைதிலி, கோயில் செயல் அலுவலர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல்,  ஒப்பந்ததாரர் விக்னேஸ்வரன், கோயில் மேலாளர் மகாதேவன், அதிமுக மாவட்ட துணைச் செயலர் துரை, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி மற்றும் அதிமுகவினர், கோயில் 
நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT