திருவண்ணாமலை

அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி களப் பயணம்

29th Jul 2019 09:58 AM

ADVERTISEMENT

செய்யாறு கல்வி மாவட்டம், குண்ணத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி களப் பயணம் மேற்கொண்டு, சிதைந்த நிலையில் இருந்த 7-ஆம் நூற்றாண்டைய கொற்றவை சிலை குறித்து கேட்டறிந்தனர்.
பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்றம்  சார்பில், கல்வி களப் பயணமாக பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் கொற்றவை சிலை குறித்து அறிந்துகொள்ள மாணவர்கள் களப் பயணமாக அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டனர். வரலாற்று ஆசிரியர் கை.செல்வகுமார் கொற்றவை சிலை குறித்து, தொடக்க கால தமிழ் சமூகம் பண்பாண்டை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்றும், பாலை நிலத்தின் தெய்வமாகவே கொற்றவையை வழிபட்டுள்ளனர். தமிழர் கடவுள் முருகனின் தாயாகவும் கொற்றவை கருதப்பட்டார். 
கொற்றவையே முதன்மையான தெய்வம். திருமாலின் தங்கையாக கருதுவதால் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம் ஆகியவற்றை இச்சிலை தாங்கியிருப்பது தெரிய வருகிறது. மேலும், ஆறு கரங்களுடன் வில், அம்பு, வாள், கேடயம், சங்கு, சக்கரம் ஆயுதங்களுடன் எருமை தலையின் மேல் நின்ற நிலையில் காணப்படுகிறது. 
கி.பி. 7-ஆவது, 8-ஆவது நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பல்லவ மன்னர்களின் வழிவந்த விஜயவேந்தன் காலத்தில் இச்சிலை வடிக்கப்பட்டு இருக்கலாம் என மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார் 
வரலாற்று ஆசிரியர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT