திருவண்ணாமலை

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

27th Jul 2019 10:11 AM

ADVERTISEMENT

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மற்றும் வந்தவாசி நகராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் வந்தவாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊர்வலத்துக்கு கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை வகித்தார். வந்தவாசி நகராட்சி ஆணையர் எஸ்.பார்த்தசாரதி ஊர்வலத்தை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
வந்தவாசி நகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி, தேரடி வழியாகச் சென்றது. ஊர்வலத்தில் நகராட்சி மேலாளர் ராமலிங்கம், இளநிலை உதவியாளர் சிவக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் யேசுதாஸ் மற்றும் கல்லூரிப் பேராசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT