திருவண்ணாமலை

ஆரணியில் அதிகபட்சமாக 79 மி.மீ. மழை பதிவு

27th Jul 2019 10:09 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியில் வியாழக்கிழமை அதிகபட்சமாக 79 மி.மீ. மழை பதிவானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் வழிந்தோடி தாழ்வான பகுதிகளில் தேங்கியது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக ஆரணியில்  79 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
மேலும், செய்யாறில் 31, செங்கத்தில் 8.20, சாத்தனூர் அணைப் பகுதியில் 10.80, வந்தவாசியில் 51, போளூரில் 55.40, திருவண்ணாமலையில் 21.20, தண்டராம்பட்டில் 32.40, கலசப்பாக்கத்தில் 60, சேத்துப்பட்டில் 54.20, கீழ்பென்னாத்தூரில் 52.20, வெம்பாக்கத்தில் 76.20 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT