திருவண்ணாமலை

மேல்பள்ளிப்பட்டில் உழவர் தின விழா

22nd Jul 2019 08:07 AM

ADVERTISEMENT

பேங் ஆஃப் இந்தியா வங்கியின் மேல்பள்ளிப்பட்டு கிளை சார்பில் உழவர் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. 
விழாவில் கிளை மேலாளர் நித்தில்சந்திரன் வரவேற்றார். சென்னை மண்டல அலுவலர் துளசிராமன், வேலூர் மண்டல வேளாண் அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் உழவர் தினத்தின் முக்கியத்துவம் குறித்தும், உழவர்களின் சிறப்புகள் குறித்தும் பேசினார். 
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சென்னை மண்டல வேளாண்மை அலுவலர் அர்சுத்ராவ், இளங்குண்ணி கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கவும், புளியம்பட்டி கிராம மகளிர் குழுவினருக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி, மேல்பள்ளிப்பட்டு விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்க கடனுதவி, மேலும் விவசாயிகளுக்கு சுயதொழில்  தொடங்குவதற்கு தனி நபர் கடன்களையும் வழங்கிப்  பேசினார். 
நிகழ்ச்சியில் செங்கம் வேளாண்மைத் துறை துணை அலுவலர் ஜெயசீலன் உள்பட வங்கி ஊழியர்கள், வேளாண்மைத் துறை அதிகாரிகள், விவசாயிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT