திருவண்ணாமலை

மதுக் கடை முன் தகராறு செய்தவர் கைது

22nd Jul 2019 08:08 AM

ADVERTISEMENT

வந்தவாசி அருகே மதுக் கடை முன் தகராறு செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
வந்தவாசி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜோசப்(35), உதயகுமார் (33). இருவரும் சனிக்கிழமை வந்தவாசி அருகே மலை எதிரில் உள்ள மதுக் கடைக்கு ஆட்டோவில் சென்று மது அருந்தினர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்தனராம். தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி வடக்கு போலீஸாரை கண்டவுடன் உதயகுமார் தப்பியோடி விட்டாராம். இதையடுத்து ஜோசப்பை கைது செய்த போலீஸார் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஜோசப், உதயகுமார் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT