திருவண்ணாமலை

தண்டராம்பட்டு அருகே பெண் கொலை

22nd Jul 2019 08:09 AM

ADVERTISEMENT

தண்டராம்பட்டு அருகே விதவைப் பெண்ணை கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தண்டராம்பட்டு அருகேயுள்ள மேல்சிறுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி அஞ்சலா (35). கூலித் தொழிலாளி. 
ஏழுமலை ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். ஞாயிற்றுக்கிழமை காலை இதே கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து அஞ்சலா சடலமாக மீட்கப்பட்டார்.
தண்டராம்பட்டு போலீஸார் வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அஞ்சலாவின் தலை, முகத்தில் ரத்தக் காயங்கள் இருந்தன. எனவே, அவரை யாரோ சரமாரியாக தாக்கிக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, உடல்கூறு ஆய்வுக்காக அஞ்சலாவின் சடலத்தை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT