5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் ஆரணி அருகே தனியார் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் மா.சண்முகராஜா தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலர்கள் கா.பெருமாள், ஜெ.ராஜா
சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டத் தலைவர் ஆர்.ஆல்அரசன் வரவேற்றார். கோட்டச் செயலர் கே.எம்.
உதயகுமார் தொடக்க உரையாற்றினார்.
முன்னாள் நிர்வாகிகள் எஸ்.ராஜவேல், எம்.மாரியப்பன், ஏ.வேல்முருகன், எஸ்.பாலகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர்கள் ப.சண்முகசுந்தரம், வே.சின்னராசு, எம்.ராஜேந்திரன்,
வி.சங்கரபாண்டி, மாநிலச்
செயலர் ஆர்.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும், சாலைப் பராமரிப்புப் பணியை தனியாருக்கு கொடுப்பதைக் கைவிட வேண்டும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.