எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சேத்துப்பட்டு அருகே விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை கிராமத்தில் எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை வகித்தார்.
இராந்தம், பெரணம்பாக்கம், கரிப்பூர், நம்பேடு, கொளக்கரைவாடி, உலகம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.