திருவண்ணாமலை

கோயில் விழாவில் ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி

12th Jul 2019 08:52 AM

ADVERTISEMENT

ஆரணி வேம்புலியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, விழாக்குழு சார்பில் வியாழக்கிழமை ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.
 ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலியம்மன் கோயிலில் ஜூலை 18, 19, 20 ஆகிய தேதிகளில் ஆடித் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, கோயில் விழாக்குழு சார்பில் வியாழக்கிழமை ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.
 விழாக்குழுத் தலைவர் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் நெல் அரிசி வியாபாரிகள் சம்மேளன மாநில பொறுப்பாளர் பி.நடராஜன் ராட்சத பலூனை பறக்கவிட்டார். இந்த பலூன் 20-ஆம் தேதி வரை பறக்கும்.
 விழாவில் தொழிலதிபர் நேமிராஜ், விழாக் குழுவைச் சேர்ந்த சுப்பிரமணி, ஆ.சரவணன், செல்வராஜ், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT